Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்”…. வாசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…..!!!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் காவல்துறையினர் மத்தம்பாளையம் தனியார் கல்லூரி அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கார், மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் காவல்துறையினரை பார்த்ததும் திரும்பி செல்ல முயன்றனர். இதையடுத்து அவர்களை பிடிக்க காவல்துறையினர் முயன்றபோது 2 பேர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பியோடினர். அதன்பின் காரில் வந்தவவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அப்பாஸ் (45) என்பதும், தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததும் தெரியவந்தது.

அத்துடன் தப்பியோடியது சிகாபுதீன், தாஜுதீன் என்பதும் தெரியவந்தது. இதில் தப்பியவர்கள் காரமடை பொன் விழா நகரில் வாடகைக்கு வீட்டில் தங்கியிருந்து தடை செய்த புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே அந்த வீட்டை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, தடை செய்யப்பட்ட பல புகையிலை பொருட்கள் 2,265 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரூபாய்.35 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள், கார், மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அப்பாசை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |