Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல் …. விசாணையில் தெரிந்த உண்மை …. போலீஸ் விசாரணை ….!!

வேனில் ரேஷன் அரிசியை  கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி பகுதியில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனைகள் 80 மூட்டைகளில் 400 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேஷன் அரிசி கடத்திய திருப்பதி, முத்தையா, கணேசன், ஆகிய 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |