உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்காக திமுக சார்பில் மாவட்டம் தோறும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பிறகு உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உளளது. இதனிடையே உதயநிதி ஸ்டாலின் திராவிடத் திருவிழா என்னும் பெயரில் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செல்கிறார்.
இந்நிலையில் தஞ்சாவூருக்கு உதயநிதி ஸ்டாலின் சென்றபோது அவரை வரவேற்க சென்ற தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன் மேயர் அங்கியுடன் உதயநிதியின் காலில் விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையதளத்தில் வெளியானதையடுத்து பெரும் சலசலப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.