மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள உளுந்தை கிராமத்தில் நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் தனியாக இருந்த நாகப்பனின் தாயார் ஜெயமணி என்பவர் தண்ணீர் மோட்டாரை இயக்குவதற்காக மோட்டார் ஸ்விட்ச்சை போட்ட போது, எதிர்பாராதவிதமாக அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உள்ளார்.
இவ்வாறு மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி பக்கத்தில் இருந்த கல்லில் மோதியதால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து நாகப்பன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.