இங்கிலாந்தின் தென்கிழக்குப் வேல்ஸ் நகரில் உள்ளது டூலைஸ் ஆறு. இந்நிலையில் சம்பவத்தன்று டேங்கர் லாரி ஒன்று பால் ஏற்றி கொண்டு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி ஆற்றில் கவிழ்ந்து விழுந்ததால் பால் முழுவதுமாக ஆற்றில் கலந்து ஆறு பாலாறு போல காட்சி அளித்தது.
இதை கண்ட மக்களும் ஆச்சர்யத்துடன் வந்து நீரை வைத்து பார்த்த போது அதில் பால் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து வீடியோக்களும், புகைப்படங்களும் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் டேங்கர் லாரி வெளியே மீட்டு எடுக்கப்பட்டுள்ளது.
When a milk tanker overturns in the river #llanwrda #wales #milk pic.twitter.com/vnyhr5FXBi
— May 🏴 (@MayLewis19) April 14, 2021