Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்டைப்பையில் மாத்திரைகள்…. மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு…. பெரியவர் எடுத்த முடிவு…!!

அரசு மருத்துவமனை வளாகத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரியார் சிலையை சுற்றி தடுப்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பியில் முதியவர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இத்தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. ஆனால் அவரது சட்டைப்பையில் நிறைய மாத்திரைகள் இருந்தன.இதனால் அவர் கொரோனாவால் பாதிப்படைந்து மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பதைப்பற்றி அரசு மருத்துவமனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |