நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பழனியில் நடைபெற்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, “திமுகவின் ஆட்சி தற்போது தரமானதாக இல்லை. அதற்கு பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட தரமற்ற பொருட்களை சிறந்த உதாரணம். இப்போது ஆளும் கட்சியாக உள்ள திமுக எங்களுக்கு கவர்னர் தேவையில்லை என கூறுகிறது. ஆனால் ஒரு காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மு க ஸ்டாலின் சட்டசபையில் தன்னுடைய சட்டையை கிழித்துக்கொண்டு ஆளுநரிடம் சென்று புகார் அளித்தார். அப்போது மட்டும் திமுகவுக்கு ஆளுநர் தேவைப்பட்டார் போலும்.!” எனக் கூறினார். மு.க ஸ்டாலின் நேரடியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடததற்கு காரணம் மக்கள் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மக்கள் கேள்வி கேட்டு விடுவார்கள் என்பதால் தான்.
இதற்கு பயந்து போய் தான் மு.க ஸ்டாலின் கம்பியூட்டர் முன்னால் அமர்ந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். அதோடு திமுக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபர் நீட் தேர்வுக்கு எதிராகத்தான் இவ்வாறு செயல்பட்டதாக கூறினார். ஆனால் தற்போது போலீஸ் விசாரணையில் அவர் குற்றப்பின்னணி உள்ளவர் என கூறப்படுகிறது. இவை இரண்டும் ஏற்கக் கூடியதாக இல்லை. கடந்த திமுக ஆட்சியில் ஏராளமான தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஆனால் தற்போது மோடி தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி ஏழை எளிய மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார் என அவர் கூறினார்.