திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்து அமைந்துள்ளது நார்சாம்பட்டு பகுதி. இங்கு இருக்கும் பூங்காவனத்தம்மன் கோயிலின் மாசி மாத அமாவாசை திருவிழாவை அங்குள்ள 18 சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடத்துவார்கள்.
அப்போது பூங்காவனத்தம்மன் சிலையை ஊர் கிராமங்கள் அனைவரும் தோளில் சுமந்து அங்குள்ள 18 ஊர்களின் வீதிகளில் வலம் வந்து பின்னர் அம்மன் சிலையை கருவறையில் வைத்து பூஜை செய்வார்கள். அதில் சாமி வேடங்கள் அணிந்து பக்தர்கள் நடனமாடி சாமியை வழிபடுவார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டு விழாவும் கோலாகலமாக தொடங்கியது. இதில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். இதில் கடவுள் வேடம் அணிந்த பக்தர்களிடம் திருமணம் ஆகாதவர்கள் சாட்டையடி வாங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்ற நம்பிக்கையில் பலரும் சாட்டையடி வாங்கினார்கள்.