Categories
உலக செய்திகள்

சட்டை இல்லாமல் பார்க்க சகிக்காது…. கேலி செய்த தலைவர்களுக்கு அதிபர் புதின் பதிலடி….!!

பிரபல நாட்டின் அதிபர் குதிரை சவாரி செய்யும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரஷ்ய நாட்டின் அதிபராக விளாடிமிர் புதின் இருக்கிறார். இவர் ஒரு திறமையான டேக்வாண்டோ பயிற்சியாளர் ஆவார். இவருடைய புகைப்படங்கள் ரஷ்ய அதிபர் மாளிகையில் அடிக்கடி வெளியிடப்படும். இந்நிலையில் ரஷ்ய அதிபர் மேல் சட்டை இல்லாமல் குதிரை சவாரி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து 2 அதிபர்கள் கிண்டல் செய்துள்ளனர். அதாவது ஜி 7 மாநாட்டிற்கு முன்பாக அதிபர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். அப்போது கனடா நாட்டின் அதிபர் ஜஸ்டின் ட்ரூட்டோ மற்றும் பிரிட்டிஷ் அதிபர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் ரஷ்ய அதிபரை கிண்டல் செய்துள்ளனர்.

அவர்கள் ரஷ்ய அதிபரை விட நாம் உறுதியானவர்கள் என்பதை காட்ட வேண்டும் என்றால் நம்முடைய சட்டைகளை கழட்ட வேண்டுமா என்று கூறியுள்ளனர். இதற்கு ரஷ்ய அதிபர் புதின் பதிலடி கொடுத்துள்ளார். அவர் மேற்கத்திய நாட்டு தலைவர்களை தான் சட்டையில்லாமல் பார்க்க சகிக்காது என்று கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக ஏதாவது நாடுகள் தாக்குதல் நடத்தும் முயற்சி செய்தால் அதேபோன்ற தாக்குதல் அந்த நாடுகளின் மீது நடத்தப்படும் என ரஷ்ய அதிபர் கூறியுள்ளார்.

Categories

Tech |