Categories
தேசிய செய்திகள்

சட்டை போட்டா தான்…. உங்க கூட வாக்கிங் வருவேன்…. அடம் பிடிக்கும் நாய்…!!

தனது எஜமானுடன் பேண்ட் மற்றும் டீசர்ட் அணிந்து வாக்கிங் செல்லும் நாய் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் குமரகுருபள்ளத்தில் வசிப்பவர் அசோக். இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்று வளர்த்துள்ளார். அதற்கு டாமி என்று பெயர் சூட்டி இருக்கிறார். பொதுவாக நமது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை பாசமாக வளர்ப்பதால் அவை நம் வீட்டின் குழந்தை போல மாறிவிடுகிறது. இவர் ஒரு முறை டாமிக்கு எதார்த்தமாக பேண்ட் மற்றும் டீசர்ட் அணிந்து அழகு பார்த்துள்ளார். அப்போது டாமி மிகவும் எடுப்பாகவும், அழகாகவும் காட்சி அளித்துள்ளது. இதையடுத்து அசோக் அந்த சட்டையை கழற்ற முயன்ற போது, டாமி அதை கழற்ற விடவே இல்லையாம்.

இதனால் அசோக் எப்போது வெளியில் சென்றாலும் டாமிக்கு சட்டை அணிந்து தான் கூட்டி செல்வாராம். இது டாமிக்கு மிகவும் பிடித்து போனதால் சட்டை போடாமல் வீட்டை விட்டு வெளியே செல்லதாம். மேலும் அசோக் வாக்கிங் செல்லும் போது கூடவே டாமியும் பேண்ட் மற்றும் டீசர்ட் போட்டு கொண்டு செல்லும் காட்சி அங்குள்ள பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

Categories

Tech |