Categories
தேசிய செய்திகள்

சட்ட மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப்…. நாளையே(ஜூன் 8) கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சட்ட மாணவர்களுக்கான மாதாந்திர  உள்ளகப் பயிற்சி (Monthly internship) திட்டத்தை மத்திய சட்ட விவகாரத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற மாநிலங்களில் இயங்கும் சட்டவிவகாரத் துறை அமைச்சகத்தின் மண்டல அலுவலங்களில் பயிற்சி பெறுவதாற்கான வாய்ப்பு வழங்கப்படும். இதில் விண்ணப்பதாரர்கள் இந்திய மாணவர்களாக இருத்தல் வேண்டும். 3 ஆண்டு பட்டப்படிப்பின் 2-வது, 3-வது ஆண்டு மற்றும் ஐந்தாண்டு பட்டப்படிப்பின் 3-வது முதல் 5-வது ஆண்டு வரை பயிலும் (அல்லது) அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/சட்டப்பள்ளி/பல்கலைக்கழகத்திலிருந்து LLB படிப்பை முடித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டு வருகிறது. வரும் ஜூன் 8ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாதாந்திர இண்டர்ன்ஷிப்கள் திட்டமானது ஜூன் 2022 – மே 2023 வரை செயல்படும். இத்திட்டத்தின் கீழ்  மாணவர்கள் பொதுவாக ஒருமாத காலத்திற்கு பயிற்சி பெறுவார்கள். மாதந்தோறும்  அதிகபட்சமாக 10-30 பயிற்சியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இப்பயிற்சித் திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களின் கல்லூரி/சட்டப்பள்ளி/பல்கலைக்கழகத்தில் இருந்து உரிய ஆவணங்கள், தடையில்லா சான்றிதழுடன் (என்ஓசியுடன்) தங்களது விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யலாம். இதற்காக https://legalaffairs.gov.in/internship எனும் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை அணுகலாம்.

பயிற்சியாளர்களின் செயல் திறன் திருப்திகரமாக இருந்தால் கௌரவத்தொகையுடன் இன்டர்ன்ஷிப் சான்றிதழும் வழங்கப்படும். இந்த வாய்ப்பு  முழு நேரப் பயிற்சித் திட்டம் ஆகும். இண்டர்ன்ஷிப்பின் காலத்தின்போது பிற பணிகளில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்துகொள்ள, தெளிவுரை பெற  011-23387914 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம். மேலும் மின்னஞ்சல் முகவரி [email protected] ஆகும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இணையதள முகவரி: https://legalaffairs.gov.in/internship/ ஆகும்.

Categories

Tech |