Categories
மாநில செய்திகள்

சட்ட மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

சட்ட பல்கலை மற்றும் சட்டக்கல்லுாரி மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பல்கலையின் பொறுப்பு பதிவாளர் விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை, அதன் இணைப்பு கல்லுாரிகள் மற்றும் அதன் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப்பள்ளி ஆகியவற்றில், இளநிலை, முதுநிலை சட்ட படிப்பு செமஸ்டர் தேர்வுகள், ஆன்லைன் வழியில் நடத்தப்படும்.

இந்த மாதமும், அடுத்த மாதமும் இந்த தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தேர்வுக்கான விண்ணப்பங்கள், ஜூன் 30 முதல், ஜூலை 10 வரை மாணவர்களிடம் பெறப்பட்டன. தேர்வுக் கான பெயர் பட்டியல், தேர்வுக்கான வழிகாட்டுதல் அடங்கிய வீடியோ, மாதிரி தேர்வு குறித்த தகவல்கள் உள்ளிட்டவை, பல்கலையின், www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் நாளை வெளியிடப்படும். மேலும், தேர்வு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, ஆன்லைன் ஒருங்கிணைப்பாளர் களை தொடர்பு கொள்ளலாம். அவர்களின் தொடர்பு விபரங்கள், பல்கலை இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |