பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், சமூக வலைதளம் மூலமாகவும் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தேர்தலை ஒட்டி நடந்த சில நிகழ்வுகள் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஆனால் தேர்தலையொட்டி சில இடங்களில் சாலை மறியல், வாக்குவாதம் போன்ற பிரச்சினைகள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் அந்த பகுதிகளில் அமைதியை நிலைநாட்டியுள்ளார்கள்.
இந்நிலையில் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், சமூகவலைதளம் மூலமாகவும் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தேர்தலையொட்டி நடந்த சில நிகழ்வுகள் குறித்து சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலையொட்டி நடந்த கலவரம் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உதவிய மக்களுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.