சட்ட விரோதமாக அள்ளிய மணலை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பொக்காரனேந்தல் சாத்துடைய அய்யானார் கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைராஜா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து போலீசார் லாரியை சோதனை செய்த போது சட்ட விரோதமாக மணல் அள்ளியது உறுதிசெய்யப்பட்டது. மேலும் மணலுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரான அதே பகுதியை சேர்ந்த பஷீர் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.