மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே 1,000 லிட்டர் சாராயத்தை வேனில் கடத்திச் சென்ற டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் அரையபுரம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வேனை சோதனை செய்தனர். அந்த சோதனையில் 1,000 லிட்டர் சாராயம் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து வேன் டிரைவர் சென்னை பெரியதெரு வடக்குப்பட்டுவை சேர்ந்த ரோஜஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.