Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்…. தனியார் விடுதியில் அதிரடி சோதனை…. 11 பேர் கைது….!!

தனியார் விடுதி ஒன்றில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலை அருகே உள்ள தனியார் தாங்கும் விடுதியில் சட்ட விரோதமாக சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார் விடுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது விடுதி அறை ஒன்றில் 11 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து 11 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் சூதாட்டத்தில் பயன்படுத்திய 6,600 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |