இலங்கை அகதிகள் 38 பேரை சட்ட விரோதமாக மங்களூருக்கு அனுப்பி வைத்த 3 பேர் வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள மரைக்காயர் பட்டினம் கடற்கரைக்கு கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி இலங்கையில் இருந்து 38 அகதிகள் பிளாஸ்டிக் படகில் வந்து இறங்கியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து மங்களூருக்கு காரில் தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி ஹோட்டலில் தங்கியிருந்த 38 இலங்கை அகதிகளை கைது செய்து மண்டபம் மற்றும் தூத்துக்குடி கடற்கரை பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி சென்றுள்ளனர்.
இதனையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மண்டபம் மற்றும் வேத பகுதியை சேர்ந்த 3 பேர் காரில் இலங்கை அகதிகளை மங்களூருக்கு அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இதனை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அந்த 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து அவர்களின் வீடுகளுக்கு சென்று தேசிய புலனாய்வு அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இவர்களின் முழு விவரங்களையும் கியூ பிரிவு காவல்துறையினரிடம் இருந்து தேசிய புலானாய்வு பிரிவு அதிகாரிகள் சேகரித்து கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.