மணல் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரி கவுண்டன் சவுளூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை காவல்துறையினர் நிறுத்துமாறு சைகை காண்பித்துள்ளனர். இதனை பார்த்ததும் டிராக்டர் ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டர் மற்றும் மணலை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.