சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த தம்பதியினர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 5 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் முருகன், அவரது மனைவி சௌமியா, தீபக், பிரவீன், கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர்.
இதனையடுத்து தம்பதியினர் உள்பட 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.