சாராய ஊறல் போட்ட குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலையூர் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் நாகல்குழி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் சட்ட விரோதமாக சாராயத்தை பாட்டிலில் அடைத்து கொண்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கார்த்திக் தனது தோட்டத்தில் மணி மற்றும் செல்லம்மாள் ஆகியோருடன் இணைந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து தோட்டத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாராய ஊறல் போட்டு வைத்திருந்த 2 பானைகள், 20 லிட்டர் கேன் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக், மணி மற்றும் செல்லம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.