Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாரிராஜ் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் சட்ட விரோதமாக அப்பகுதியில் மாரிராஜ் மது பாட்டில்கள் விற்பனை செய்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மாரிராஜை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |