Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆ.கூடலூர் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் சரவணன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சரவணனை கைது செய்ததோடு, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |