சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மூன்று பேர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் இரண்டு பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஆனால் மணிகண்டன் என்பவரை மட்டும் காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 3000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.