சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உத்தரவின் பேரில் காவல்துறையினர் கஞ்சா விற்பனை தடுப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் கூத்தனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி செல்வராஜ் என்பதும், சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் அந்தோணிசெட்டி என்பதும் தெரியவந்தது. இவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவர்களை கைது செய்த காவல்துறையினர் 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ரட்சகன் மற்றும் விஜய் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.