Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டவுன் பகுதியில் இருக்கும் பெட்டிக்கடைகளில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை செய்துள்ளனர். அதில் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக மூர்த்தி, இளங்கோவன், கருணாகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |