சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் மரவாபாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் பார்த்ததும் ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தார். ஆனாலும் காவல்துறையினர் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் நடராஜன் என்பதும், சட்டவிரோதமாக அவர் மது பாட்டில்களை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் நடராஜனை கைது செய்து, அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.