Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாண்டம் பகுதியில் கொற்றிகோடு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.

அந்த விசாரணையில் பத்மநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஆசீர்வாதம் என்பது தெரியவந்தது. இவர் மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் ஆசீர்வாதத்தை கைது செய்து அவரிடமிருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |