Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியான நின்றுகொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் திருக்கோகர்ணம் பகுதியில் வசிக்கும் விஷ்ணு, கார்த்திக் மற்றும் அசோக் என்பது தெரியவந்துள்ளது.

இவர்கள் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 வாலிபர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |