சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்ரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக முருகன், அவரது நண்பர் ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.