சட்ட விரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பருத்திகுளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிற்றாறில் இருந்து சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து மணல் அள்ளி கொண்டிருந்தவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் மாரியப்பன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரியப்பனைகைது செய்ததோடு, அவரிடமிருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.