Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி அருகில் ஆடூர் அகரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது அதில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதை பறிமுதல் செய்த  காவல்துறையினர் காரில் வந்த நபர்களை விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் காட்டுமன்னார் கோவிலைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த ரஜினி விஜய், இளஞ்செழியன் என்பது தெரியவந்துள்ளது. இதன்பிறகு காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

இதேபோன்று மீனாட்சி பேட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது அதில் புகையிலை மற்றும் குட்கா  பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதை பறிமுதல் செய்த  காவல்துறையினர் மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் மீனாட்சி பேட்டை பகுதியில் வசிக்கும் குமரவேல் என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |