சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது காவல்துறையினர் மணல் ஏற்றி வந்த டிராக்டரை சுற்றி வளைத்தனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டிராக்டர் ஓட்டுநர் சக்திவேல் மற்றும் அவருடன் இருந்தவர் மதி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சக்திவேல் மற்றும் மதி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.