சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குறுக்குத்துறை மேல்நிலை நீர்தேக்க தொட்டி அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சுந்தரம் என்பது தெரியவந்துள்ளது.
இவர் மதுபாட்டில்களை கடத்தி வந்துள்ளார். இதனையடுத்து சுந்தரத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.