சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் சந்தேகப்படும் படியான நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் அரவிந்த் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அரவிந்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.