சட்ட விரோதமாக மணல் கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள செமினிபட்டியிலிருந்து குட்லாடம்பட்டி செல்லும் சாலையில் கச்சைகட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஷ் மற்றும் கிராம உதவியாளர் ஜெயக்குமார் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதனை அடுத்து லாரி ஓட்டுனர் பிரபு, ஹரிஷ், கோவிந்தராஜ் ஆகிய 3 பேரையும் அதிகாரிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினர் லாரி மற்றும் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.