சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சாஸ்தா கோவில் அருகே பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து பணம் வைத்து சூதாடிய கடத்தியதாக பாலச்சந்திரன், நம்பிராஜன், கதிர், ரமேஷ், துரை, செல்வின், அருணாச்சலம், இளங்கோ, நயினார் ஆகிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 7 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.