சட்ட விரோதமாக மணல் கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி அப்பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் அருண் பாண்டியன் மற்றும் மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் இணைந்து இரு சக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக ஆற்றிலிருந்து மணல் கடத்தி சென்றுள்ளனர், இதனையடுத்து அருண் பாண்டியன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருசக்கர வாகனம் மற்றும் மணல் மூட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.