Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

வாகன சோதனையின் போது காவல்துறையினரால் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட தாசில்தார் காதர் அலிக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி தாசில்தார் காதர் அலியின் தலைமையில் ஒரு குழு விழுப்புரத்திற்கு சென்றுள்ளனர். இதுகுறித்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தாசில்தார் காதர் அலியுடன் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்

இவர்கள் செம்பியன்மாதேவி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த லாரியை மறுத்துள்ளனர்.அந்த லாரியை சோதனை செய்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதில் மொத்தம் 20 டன் ரேஷன் அரிசி இருந்தது. அதை பறிமுதல் செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுனரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேப்போன்று விக்கிரவாண்டி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் ரேஷன் அரிசி இருந்தது  தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அரிசியை பறிமுதல் செய்தனர். அதன் பிறகு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |