சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி அருகே குண்டாற்றுப்படுகையில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்த குற்றத்துக்காக வெள்ளைச்சாமி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதேபோல் மற்றொரு டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்த ராமர், மணிகண்டன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.