சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் தியாகராஜபுரம் பகுதிக்கு சென்றபோது சிலர் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் முருகன் மற்றும் மொட்டையம்மாள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். இதில் மொத்தம் 55 லிட்டர் சாராயம் இருந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.