சட்டவிரோதமாக மணல் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சிராயன்குழி பகுதியில் இன்ஸ்பெக்டர் தாஸ் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரியை காவல்துறையினர் மறித்து சோதனை செய்தனர். அதில் செம்மண் இருந்தது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுனரிடம் விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் சட்டநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அருளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.