சட்டவிரோதமாக மணல் அள்ளிய குற்றத்திற்காக டிராக்டர் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் இருக்கும் கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். இதனை அடுத்து காவல்துறையினரை பார்த்ததும் பொக்லைன் எந்திர ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ஆனால் டிராக்டர் ஓட்டுநரான முத்துபாண்டி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.