Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் குருநாதன் கோவில் விலக்கு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் மேல அருகன்குளம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பது தெரியவந்துள்ளது.

இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்ததோடு அவரிடமிருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |