Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்….. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள உத்தனப்பள்ளி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஜெகன் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் ஜெகனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |