சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மேலப்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் முன்னீர்பள்ளம் பகுதியில் வசிக்கும் செல்வம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் செல்வம் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்வத்தை கைது செய்ததோடு, அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.