சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூரில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் வேல்முருகன், கருப்பையா, முத்தையா, பால்சாமி ஆகிய 4 பேரும் இணைந்து சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.