சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றி திரிந்த 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் செல்வநாதன், நந்த வேல் மற்றும் இளையராஜா என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் அப் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து செல்வநாதன், நந்தவேல், இளையராஜா ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.