Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருமலைகொழுந்துபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு பேர் சட்டவிரோதமாக 4 மூட்டைகளில் மணல் அள்ளி மொபட்டில் கடத்தி சென்றதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து மணல் கடத்திய குற்றத்திற்காக நடுவக்குறிச்சியை சேர்ந்த கண்ணன் மற்றும் கல்லத்தியான் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 மணல் மூட்டைகள் மற்றும் மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |