Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான குழு சின்னமாம்பட்டு தொகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர்.

அந்த விசாரணையில் புதுமாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார், கோவிந்தன் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் 100 கிராம் கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து  2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

Categories

Tech |