சட்ட விரோதமாக மது பாடல்கள் கடத்திய நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த ஒரு நபரை காவல்துறையினர் சைகை காண்பித்து நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் அந்த நபர் மொபட்டை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் மொபட்டில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் மது பாட்டில்கள் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.